காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்குதல் சம்பந்தமான யோசனை இன்று (04) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலகத்தின் தலைவருக்கு ஒரு இலட்சம் ரூபா மாதாந்த கொடுப்பனவும், தொலைபேசிக் கொடுப்பனவு, மாதாந்தம் 225 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவுடன் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றும் வழங்கப்பட உள்ளது.
காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 75,000 ரூபா கொடுப்பனவும், தொலைபேசிக் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு என்பன வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அரசியலமைப்பு சபையின் பரிந்துரைப்படி காணாமல் போனோர் சம்பந்தமான அலுவலகத்திற்காக தலைவர் உட்பட ஏழு உறுப்பினர்கள் கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment