டீசல் விலை உயர்வு, இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் (03) காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் நேற்று இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அத்துடன் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டம் அமல்படுத்த இலங்கை அரசுடமை ஆக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மேலும், டீசல் விலை அதிகரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்படைவதால் டீசலின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை வேதாரணயம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாகவு மீனவ அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 5 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment