கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐந்தாவது அமர்வு கடந்த 30.08.2018ம் திகதி வியாழக்கிழமை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச சபையின் உறுப்பினர் மெளலவி ஹாமித் லெவ்பை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களை பார்த்து எமது பிரதேச சபையின் தவிசாளர் பயன்படுத்தும் வாகனத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பெயர் பொறிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை இதன் மூலம் தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும் இவ்வாகனத்திற்கு சபையின் பெயரினைப் பொறிப்பதில் ஆட்சேபனை உள்ளதா? என சபையில் கேள்வியெழுப்பினார்.
அதற்கு தவிசாளர் அஸ்மி பதிலளிக்கையில், “வாகனத்தின் பின் பகுதியில் அரச இலட்சினை முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதாகவும், முன் பகுதியில் தவிசாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் போது குறுக்கீடு செய்த பிரதேச சபை உறுப்பினர் ஹாமித், இதனை மக்கள் அடையாளங்காணும் வகையில் பெயர் பொறிக்கப்பட்ட வேண்டும், ஏனெனில், வெறும் தவிசாளர் எனப்பெயர் பொறிக்கப்பட்டிருந்தால், எந்தச்சபையின் அல்லது எந்த நிறுவனத்தின் தவிசாளர் என மக்கள் அடையாளங்காண்பது எனக்கேள்வியெழுப்பினார்.
அதற்கு தவிசாளரினால் எந்தப்பதிலும் அளிக்க முடியவில்லை. அதன் பின்னர் பெயர் பொறிப்பதில் எவ்வித ஆட்சேபனையுமில்லையென தவிசாளர் தெரிவித்தார். தவிசாளர் பயன்படுத்தும் வாகனத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபை என மும்மொழியிலும் பெயர் பொறிக்கப்படுமா?
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment