காவத்தமுனை, தியாவட்டவான் பிரதேசங்களுக்கான சுத்தமான நீர்த்திட்டம் தொடர்பில் கள ஆய்வு - News View

About Us

About Us

Breaking

Friday, September 28, 2018

காவத்தமுனை, தியாவட்டவான் பிரதேசங்களுக்கான சுத்தமான நீர்த்திட்டம் தொடர்பில் கள ஆய்வு

ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் வாக்குறுதிக்கமைய காவத்தமுனைக்கான சுத்தமான குடிநீரை வழங்கும் முன்னெடுப்புக்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

காவத்தமுனை மக்கள் எதிர்நோக்கி வரும் சுத்தமான குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ், பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எஸ்.சித்தி ஜெஸீமா மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், பொது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் தற்காலிக தீர்வினைப் பெற்றுத்தருவதாக வழங்கிய வாக்குறுதியின் பேரில் நிலக்கீழ் நீரைச் சுத்திகரித்து வழங்கத்தேவையான ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் தொடரில் நேற்று 27.09.2018ம் திகதி வியாழக்கிழமை காவத்தமுனை, தியாவட்டவான் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள் பொருத்தமான இடங்களைப் பார்வையிட்டதுடன், கள ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கான தற்காலிக தீர்வு என்பதுடன், கல்குடாத்தொகுதியை மையப்படுத்தி அமைச்சர் ஹக்கீம் அவர்களால் முன்னெடுக்கப்படும் பாரிய சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் நிறைவு பெறுகின்ற பட்சத்தில் குழாய் வழியாக சுத்தமான குடிநீரை இப்பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

அத்துடன், மக்கள் நலனில் அக்கறையோடு இந்த தற்காலிகத் தீர்வினை வழங்கிய கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கல்குடாவிலுள்ள அனைத்து மக்களும் சுத்தமான குடிநீரைப்பருக வேண்டுமெனும் நல்லெண்ணத்தில் உழைத்து வரும் அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ், நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், கட்சியில் ஆதரவாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் காவத்தமுனை மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எஸ்.ஜெஸீமா தெரிவித்தார்.

செம்மண்ணோடை முஹம்மது பயாஸ் 

No comments:

Post a Comment