பொது எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுதும் வகையிலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸார் அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை புதன்கிழமை கொழும்பில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறும், ஜனநாயக உரிமைகளைக் காக்குமாறும் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாளைய தினம் பொதுமக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அதிகாரத்தை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment