கள்ளத்தொடர்பில் கர்ப்பமான பெண் கொலை - சந்தேகநபருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

கள்ளத்தொடர்பில் கர்ப்பமான பெண் கொலை - சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் 5 மாதம் கர்ப்பமுற்ற பெண்ணின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் (42) என்பவருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன், சந்தேகநபரை நேற்று (01) பிற்பகல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொழுது பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேகநபர் ஏற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கழுத்தை நெரித்தே கொலை செய்தேன் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான் அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து (ஓகஸ்ட் 28) அன்று அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டிலிருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.
பின்னர் அம்பாள்குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள்பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம் வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை வந்துவிட்டது. அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில், அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக் அவளது பாவாடை மேற் சட்டடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு ஹேண்ட்பேக் மற்றும் மேல் சட்டை என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன். வந்து பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் என்பவற்றை மறைத்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன். குடித்து நானும் சாவோம் என்று பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனை வீட்டுக்குள் மறைத்துவைத்திவிட்டேன்.
சம்பவ இடத்தில் பெல்ற் மற்றும் சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன். இக்கொலையை நான் மட்டுமே செய்தேன் என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் காட்ட முடியும். நான் தான் இதனை செய்தேன் என குறித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்த்தன பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர ஜீவ பொலிஸ் மூலஸ்தான பதில் பொலிஸ் பரிசோதகர் லலித்ரத்ன ஆகியோரின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி மாவட்ட பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்தினம் ஜெசிந்தனின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த உத்தியோகத்தர்களான நிஹால், விஜயசேகர, மிலன், சங்கர் சந்தன, சிவதாஸ், லீலாவதி, அசங்க ஆகியோர் சிறப்பாக செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றை வைத்து இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுதே சந்தேகநபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், கனகபுரம் பகுதியில் இருந்து குறித்த பெண்ணின் பாவடை போன்றவற்றை மீட்ட பொலிசார், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கிள், அவர் பயன்படுத்திய தொலைபேசி , தலைக்கவசம், மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டுள்ளனர். அம்பாள் குளம் பகுதியில் விடப்பட்ட மேற்சட்டை என்பவற்றை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிசார் மீட்டிருந்தனர். பின்னர் அவரது மனைவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு குறித்த விசாரணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இந்த விசாரணைகளில் பெரிதும் தமக்கு உதவிய கிளிநொச்சி ஊடகவியாளர் ஆன எஸ்.என். நிபோஜன் மற்றும் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் அசோக்குமார் ஆகியோருக்கு பொலிசார் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய ஏனைய செய்திகளுக்கு
1. https://www.newsview.lk/2018/08/blog-post_786.html
2. https://www.newsview.lk/2018/08/blog-post_9852.html
3. https://www.newsview.lk/2018/08/5_31.html
4. https://www.newsview.lk/2018/08/blog-post_1149.html

No comments:

Post a Comment