பிரான்ஸ் பள்ளிகளில் செல்போனுக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

பிரான்ஸ் பள்ளிகளில் செல்போனுக்கு தடை

பிரான்ஸ் நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ - மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ - மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேரிடர் காலங்களிலும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பள்ளிகளுக்கு செல்லும் போது மாணவர்கள் தங்களது செல்போன்களை அனைத்து வைப்பதுடன் அவற்றை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை உயர் நிலைப்பள்ளிகளும் தாமாக முன்வந்து செயல்படுத்தலாம். தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment