பொலனறுவை, ஹோனேகம பகுதியிலுள்ள பெரியாறு ஆற்றிலுள்ள சேற்றுப்பகுதியில் 5 யானைகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோனேகம பகுதியிலுள்ள காட்டுப்பகுதியிலுள்ள குறித்த யானைகள் ஆற்றினை கடக்க முற்பட்ட போதே சேற்றில் சிக்கி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேசமக்கள் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில் குறித்த பகுதிகளுக்கு வனஜீவராசிகள் வருகை தந்து உயிரிழந்த யானைகளை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் இதுவரை அப்புறப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவை, அநுராதபுரம் பகுதிகளில் அண்மை காலமாக யானைகள் வேட்டையாடும் செயற்பாடுகள் கட்டுப்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சேற்றுக்குள் குறித்த யானைகள் சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment