தெல்லிப்பளையில் 4.4 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 5, 2018

தெல்லிப்பளையில் 4.4 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது

இராணுவத்தினர் வசமிருந்த 4.4 ஏக்கர் நிலப்பரப்பினை மக்களிடம் கையளிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது. யாழப்பானம் – தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களே விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இதன் பிரகாரம், வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள 1.19 ஏக்கர் நிலப்பரப்பும், மயிலிட்டி வடக்கு மற்றும் கலைமகள் மகா வித்தியாலத்திற்கு சொந்தமான 2.75 ஏக்கர் நிலப்பரப்பும் குரும்பக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தின் அரை ஏக்கர் நிலப்பரப்பும் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்

விடுவிக்கப்படவுள்ள காணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் நாளை (06) கையளிக்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மூன்று வருடங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த 65,174 ஏக்கர் நிலப்பரப்பு உரிய நபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

19,260 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினர் வசம் உள்ளதுடன், இதில் 2,586 ஏக்கர் நிலப்பரப்பு தனியாருக்கு சொந்தமானது என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment