இஸ்லாம் பாட ஆசிரியர்களின் நியமன்த்துக்காக அரச வர்த்தமாணி அறிவித்தல் விடுத்தமைக்காக உலமா கட்சி அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, விண்ணப்பதாரிகளின் வயது 35 என்றிருப்பதை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, கடந்த கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தின் போது 35 வயதுக்குட்பட்டவர்களே விண்ணப்பிக்க முடியும் என்பதை 45 வயதாக்கும் படி உலமா கட்சி சுட்டிக்காட்டியது.
அதனைத்தொடர்ந்து தமிழ் சகோதர அரசியல்வாதிகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசும் வயது விடயத்தில் மாற்றம் கொண்டு வந்தது.
இஸ்லாம் பாட ஆசிரியர் நியமனம் நீண்ட காலமாக வழங்கப்படவில்லை என்பதால் அதனை எதிர் பார்த்த மௌலவிமார் பலர் 35 வயதை கடந்த நிலையில் உள்ளனர். இவர்ளும் பாரிய வாழ்வாதார பிரச்சினையை எதிர் நோக்குகிறார்கள்.
ஆகவே இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பதாரிகளின் ஆக குறைந்த வயதாக 40 வயதை அறிவிக்கும் படி உலமா கட்சி அரசை கேட்டுக்கொள்வதுடன் இது விடயத்தில் கவனமெடுக்கும் படி சகோதர முஸ்லிம் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment