இங்கிலாந்து பிரதமரை கொல்ல திட்டமிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 1, 2018

இங்கிலாந்து பிரதமரை கொல்ல திட்டமிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை

இங்கிலாந்து பிரதமரை கொல்ல திட்டமிட்ட நபருக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் பிர்மிங் காம் பகுதியைச் சேர்ந்தவர் நாய்முர் ஜகாரியா ரஹ்மான் (21). ஐ.எஸ். உறுப்பினரான இவர் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்ல திட்டமிட்டார்.

இவர் தனது நண்பருக்கு டெலிகிராம் மூலம் தகவல் அனுப்பினார். அதில் பாராளுமன்றத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தி பிரதமர் தெரசா மேவை தலை துண்டித்து கொலை செய்ய விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை அறிந்த உளவுத்துறை அவரை தீவிரமாக கண்காணித்தது. வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் வாங்கிய போது அவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.

அவர் மீது லண்டனில் உள்ள பழைய பெய்லி மத்திய குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ஹாட்டன் கேவ் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment