வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 1, 2018

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது நிலவும் வரட்சியின் காரணமாக வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட 50 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆகக்கூடுதலான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்குத் தேவையான தகவல்களை அமைச்சர் துமிந்த திசாநாயக்காவின் ஆலோசனைக்கமைவாக திரட்டப்பட்டு வருவதாக தேசிய இடர் நிவாணர சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார். 

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்காக 5 கோடி 50 இலட்சம் ரூபா மாவட்டச் செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

பௌசர்கள், தாங்கிகள் மற்றும் டிரக்டர்கள் ஆகியனவும் வழங்கப்பட்டன. ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. 

உலர் உணவுப் பொருட்கள் இந்த வருடத்தில் பல மாதங்கள் வழங்கப்பட்டதுடன், வரட்சியை மீண்டும் எதிர்நோக்கிய மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலர் உணவு முத்திரைக்குப் பதிலாக அரசாங்கம் 2.5 பில்லியன் நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

No comments:

Post a Comment