2012-2018 காலப்பகுதியில் தாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் முன்னெடுப்பு பற்றி முஸ்லிம் காங்கிரஸ் பாரளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளது! - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

2012-2018 காலப்பகுதியில் தாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் முன்னெடுப்பு பற்றி முஸ்லிம் காங்கிரஸ் பாரளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளது!

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் தொடக்கம் 2018 ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் இனந்தெரியாதோரால் (காடையர்களினால்) தாக்கப்பட்ட புனித பள்ளிவாசல்கள் விபரங்களும், அது தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் அடிப்படையில் விசாரணையின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக தாக்கள் செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பான முழு விபரங்களையும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

மேற்படி விடயம் சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எல்.எம். நசீர் பாராளுமன்றத்தில் வினா எழுப்புவதற்காக முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை ஓய்ந்த பின்னர் வட மாகாணத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள , தமிழ், முஸ்லிம் மக்களது எண்ணிக்கை தொடர்பிலான தகவல்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எல்.எம் நசீர் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்குமாறு கேட்டும் கேள்வி எழுப்பயுள்ளார்.

அப்ஹாம் நிஸாம்

No comments:

Post a Comment