புதிய புகையிரத கட்டணங்கள் நாளை முதல் அமுல் - முழு கட்டண விபரங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

புதிய புகையிரத கட்டணங்கள் நாளை முதல் அமுல் - முழு கட்டண விபரங்கள்

ரயில் கட்டணங்கள் நாளை (01) முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு பின்னரே ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டண அதிகரிப்பின்படி கொழும்பு – யாழ்ப்பாண 3ஆம் வகுப்புக் கட்டணம் 320 ரூபாவில் இருந்து 350ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

கொழும்பு – பதுளை கட்டணம் 205 ரூபாவில் இருந்து 275 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

கொழும்பு – மட்டக்களப்பு கட்டணம் 235 ரூபாவில் இருந்து 315 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

கொழும்பு – திருகோணமலை கட்டணம் 210 ரூபாவில் இருந்து 280 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

கொழும்பு – புத்தளம் கட்டணம் 120 ரூபாவில் இருந்து 155 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

கொழும்பு – கண்டி கட்டணம் 110 ரூபாவில் இருந்து 140 ரூபாவாக உயர்த்தப்படுகிறது.

கொழும்பு- சிலாபம் கட்டணம் 80 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

கொழும்பு – குருநாகல் கட்டணம் 95 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment