குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்கள்

பொகவந்தலாவ லோய்னோன் தோட்டபகுதியில் 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29) சனிகிழமை காலை 09.30 மணிஅளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. 

குளவி கொட்டுக்கு இலக்காகிய 14 தொழிலாளர்களுள் இரண்டு ஆண் தொழிலாளர்களும் 12 பெண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனமதிக்கபட்டதாகவும் இதில் 10 பெண் தொழிலாளர்களும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் சிக்சிசை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார். 

சதீஸ்குமார்

No comments:

Post a Comment