அம்பேபுஸ்ஸ கொலைச் சம்பவம் : கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் பணி இடைநீக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

அம்பேபுஸ்ஸ கொலைச் சம்பவம் : கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் பணி இடைநீக்கம்

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இராணுவ சிங்க ரெஜிமேண்டின் ஆரம்ப விசாரணை நீதிமன்றம் மற்றும் இராணுவ பொலிஸாரால் அவர்கள் இருவர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார். 

விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை பொலிஸாரிடம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதுடன் குறித்த இருவரினதும் சம்பளமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 21 ஆம் திகதி அதிகாலையில் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் அதே முகாமில் பணியாற்றிய இரண்டு இராணுவ வீரர்கள் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், கொலை செய்வதற்காக பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காணாமல் போயிருந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment