இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் வட மாகாண முதலமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் வட மாகாண முதலமைச்சர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதன் பொருட்டு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் இலங்கைக்கான சர்வதேச நியாயசபையில் முற்படுத்துவதன் பொருட்டு, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டுவருதல் வேண்டுமென அவர் கூறியுள்ளார். 

யாழ் பலாலி வீதியின் கந்தர்மடச் சந்தியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், 

புதிய கட்சி தொடங்குவது பற்றி உங்கள் எல்லோரதும் கருத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன் என்றும் கூறியுள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட, தலைமைப் பாத்திரம் மற்றும் அதன் அணுகுமுறை போன்றவற்றில் அது தோல்வி அடைந்துவிட்டது என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

அத்துடன் கிழக்கு மாகாணத் தமிழர்கள் முஸ்லிம் மக்களால் மனவருத்தம் அடைந்துள்ளதாகவும், வட மாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment