இயற்கை உரம் தொடர்பிலான தரம் குறித்து ஆராய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

இயற்கை உரம் தொடர்பிலான தரம் குறித்து ஆராய நடவடிக்கை

நகர கழிவுப் பொருட்கள் மூலம் பெறப்படும் இயற்கை உரம் தொடர்பிலான தரம் குறித்து ஆராய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகர கழிவுப் பொருட்கள் மூலம் பெறப்படும் இயற்கை உரம் தொடர்பிலான தரம் குறித்து விரைவாக விஞ்ஞான ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய உர செயலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறு தயாரிக்கப்படும் செயற்கை உரத்தில் கற்மியத்தின் அளவு ஆகக்கூடுதலாகக் காணப்படுவதாக சில தரப்பினர் விவசாய அமைச்சிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்திய, அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சேதனப் பசளையை பயன்படுத்துவதில் விவசாயிகளை ஈடுபடுத்துவதுடன் அவர்கள் பயன்படுத்தும் இவ்வாறான உரத்தில் உள்ள கற்மியத்தில் உள்ள உலோகங்களின் அளவு கூடுதலான வகையில் காணப்படுமாயின் இதன் மூலம் பொதுமக்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவருமென்றும் அமைச்சர் கூறினார். 

நாடு முழுவதிலும் உரவிநியோகம் மற்றும் உரப்பாவனை தொடர்பில் வாராந்தம் நடைபெறும் மதிப்பீட்டுக் கூட்டம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

No comments:

Post a Comment