இன்று முதல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

இன்று முதல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் இன்று (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, முத்திரை ஒட்டி அடையாள அட்டை தயாரிக்கும்போது அறவிடப்படும் கட்டணம் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளது.

15 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் தங்களின் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு இன்று முதல் 100 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 250 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல்போன தேசிய அடையாள அட்டைக்கான புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இந்தக் கட்டணங்களை, கிராம சேவகர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் செலுத்தி, அதற்கான கட்டண பற்றுச்சீட்டை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தில் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment