வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் (03.08.2018) இரவு 9 மணியளவில் இரண்டு யானை தந்தங்களை மீட்டுள்ளதுடன் கனகராயன்குளத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நேற்றைய தினம் இரவு கனகராயன்குளம் பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment