பிறை பற்றிய குறிப்பிட்ட உலமாக்களுக்கு மட்டும் என்ற அழைப்பில் நாளை (05) பாலமுனையில் அம்பாரை மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிறை சம்பந்தமான பல கருத்துக்கொண்ட உலமாக்களையும் அழைக்காமல் உலமா சபை கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற நிர்வாகத்தினரை மட்டும் அழைத்து கூட்டம் நடத்துவதன் மூலம் பிறை பற்றிய மாற்று கருத்துக்களையும் அறிவதற்கு உலமா சபை தயாரில்லை என்பதை காட்டுகிறது.
அது மட்டுமல்லாது நாட்டு முஸ்லிம்களின் தலையான இப்பிரச்சினை பற்றி பேச அனைத்து அம்பாரை மாவட்ட உலமாக்களையும் அழைத்து இது பற்றி பகிரங்கள தளத்தில் பேசும் உலமாக்களையும் அழைத்து விரிவாக கலந்துரையாடாமல் வெறுமனே நிர்வாகத்தின் ஒரு சிலரை மட்டும் அழைத்திருப்பதன் மூலம் அம்பாரை மாவட்டத்தின் முழு உலமாக்களும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முபாறக் அப்துல் மஜீத்
பிறை தொடர்பான முன்னரான செய்திக்கு
http://www.newsview.lk/2018/08/blog-post_663.html
No comments:
Post a Comment