அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா...! - ஒரு வைத்தியரின் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா...! - ஒரு வைத்தியரின் ஆலோசனை

உங்களுக்கு வைத்தியரிடம் இருந்து வெளியே பாமசிகளில் வாங்குமாறு எழுதித்தரப்படும் சிட்டைக்காட்டியதும் பாமசிகளில் கேட்கப்படும் பிரதான கேள்வி இதுதான்...!

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா...? அல்லது இந்த மருந்து பழையது அதைவிட சிறந்த புதியமருந்து ஒன்று வந்திருக்கின்றது தரவா...? 

இவ்வாறான கேள்விகளுக்கிடையில் வைத்தியர்களை பரிகசிக்கவோ அல்லது வைத்தியர்களின் தரத்தை கீரிக்கிழிக்கவோ உள்ள சில வசனங்களும் கூட பொறுத்தப்படலாம்.

அனேகமாக ஏன் இந்தக்கேள்வி உங்களிடம் கேற்கப்படுகின்றது...?

அப்படியாயின் பாமசிக்காரருக்கு தெரிந்த அந்த நல்ல பிராண்ட் டொக்டருக்கு தெரியாதா...?

ஒரு கதை சொல்லி விடுவோம்,
ஒரு கடுங்குளிர்காலம் காலையில் ஒரு வயதுக்குழந்தையுடன் ஒரு தாய் எனது வீட்டிற்கு வந்தார். சரியான இருமல், தடிமல் டொக்டர், இரவையில தூங்குறாரும் இல்ல, கடும் கஸ்ட்டமாயிருக்கு...!பரிசோதித்துவிட்டு மூன்று வகையான மருந்துகள் எழுதிக்கொடுத்தேன் அதில் ஒன்று பிரிட்டன் சிரப்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் அதே தாய் அக்குழந்தையுடன் எனது கிளினிக்கிள் வருகிறாள், இருமல் தடிமல் கொஞ்சம் குறைந்திருக்கின்றது, தூக்கம் தான் இல்லை என்றார், அவருக்கும் தூக்கம் இல்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

சரி நான் தந்த மருந்தை தாருங்கள் என்றேன் அவர் அதை தயங்கித்தயங்கி தந்தார், அதில் நான் எழுதிய பிரிட்டன் பானி இருக்கவில்லை, ஏன் நான் எழுதிய அந்த பிரிட்டன் பானி வாங்கப்படவில்லை என்று கேட்டேன்.

அதற்கு அவர் இல்ல டொக்டர் அது நீங்க தந்த பிரிட்டன் பானிய விட, புதுசா ஒரு மருந்து வந்திருக்குதாம் தடிமல் இருமலுக்கு அந்த மாதிரி மருந்தாம், புது மருந்தாம், பிரிட்டனை விட கடும் நல்லமாம், என்று லொரட்டிடீன் என்ற சிரப்பை காட்டினார்.

இல்லம்மா தடுமல் இருமலுக்கு நல்லமருந்து என்றதோட சேர்த்து பிள்ளை பிரிட்டன் மருந்துக்கு நல்லா தூங்கட்டும் எண்டுதான் நான் பிரிட்டன் சிரப்பை தந்தேன், எனக்கு லொரட்டிடீன் சிரப் தர தெரியாமலா உம்மா நான் உங்களுக்கு பிரிட்டன் சிரப் தந்தேன் என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

இல்ல டொக்டர் ஹஸ்பண்ட்தான் வாங்கி வந்திட்டாரு, எனக்கு தெரியும் டொக்டர் மன்னிச்சிருங்க, இல்லம்மா, அதெல்லாம் பராவல்ல இந்தாங்க பிரிட்டன் சிரப் இதையும் சேர்த்துகுடுங்க, புள்ள நல்லாதூங்கும், இருமலும் 4 அஞ்சி நாளைல சரியாகிடும் என்று அனுப்பிவைத்தேன்.

நான் கொடுத்த பிரிட்டன் சிறப் 48 ரூபாய், பாமசியில் கொடுக்கப்பட்ட லொரட்டிடீன் சிரப் மட்டும் 300 ரூபாவிற்கு மேல்.

ஒரு டொக்டர் உங்களுக்கு மருந்து தரும் போது பல விடயங்களை கவனமெடுப்பார் .

உங்களது நோயின் தன்மை, உங்களுக்கு உள்ள மற்ற நோய்களின் தன்மை, உங்களது வயது, உங்களது கிட்னி, ஈரல் போன்றவற்றின் செயற்பாட்டின் அளவு, தரப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதன் தேவைகளும் (உதாரணமாக நான் மேலே கூறியது போல் பிரிட்டனின் பக்கவிளைவு சிறிது தூக்கத்தை ஏற்படுத்தல்), நீங்கள் கருவுற்றிருக்கிறீர்களா, குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா, உங்களது அன்றாட செயற்பாடுகள் (பிரயானம், பரீட்சை, நுணுக்கமான வேலைகள்) போன்ற மேலும் பல காரணங்களோடு உங்களது சமூக பொருளாதார நிலையை முக்கியமாக கவணத்தில் எடுத்தே ஒரு வைத்தியரால் உங்களுக்கு மருந்து தரப்படும் .

ஆனால், அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா! எனக்கேற்கும் நபரோ, மேலுள்ள எந்த விடயங்களிளும் பொருத்தமான அறிவைக் கொண்டிருப்பவராக இருக்கமாட்டார்.

ஏனெனில் தாம் செய்வது இலங்கையில் தடை செய்யப்பட்ட, தண்டனைக்குறிய குற்றமாகும் எனத்தெரிந்துகொண்டு அதன் பாரதூரங்களை அறியாமல் தன் சுயநலத்திற்காக ஒரு குற்றமிழைக்கும் குற்றவாளியே அவர். 

எமது நாட்டின் சட்டத்தின் ஓட்டைகள் மட்டும் இல்லாவிட்டால் அல்லது வெளிநாடு ஒன்றில் என்றால் கனகாலம் கம்பி என்னும் ஒருவராய் இருப்பார்.

இவர்களது, அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா என்று கேற்பதற்கான காரணங்கள் பல

1- விலைகூடுதலான மருந்துப்பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுதல்.

2- அவர்களுக்கு சிறப்பு கொமிசன், சலுகைகளை வழங்கும் மருந்துகளை உங்களுக்கு தள்ளி விடுதல்.

3- இலாபம் கூடுதலான மருந்துவகைகளை உங்களுக்கு புகட்டி விடுதல்.

4- ஸ்டொக் அதிகமாக எடுக்கப்பட்ட மருந்துகளை குறைத்துக்கொள்ளல்.

5- டேட் முடியப்போகும் மருந்துகளை முன்கூட்டி தீர்த்துவிடல்.

6- நீங்கள் கேட்ட அந்த மருந்து அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டியும் சில புனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் டொக்டரை விட தமக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்ற தனது மூளையின் மகுடிக்கு ஆடுபவர்கள்.

அத்தோடு சிலர் மெடிக்கல் ரெப் சொல்லுவதையெல்லாம் நம்பி, மக்களுக்கு நல்லதைக்கொடுக்க போராடும் தியாக செம்மல்கள்.

கவனம் 
அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா...!
என்பது உங்களுக்கு, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தாய் முடியலாம்.

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா...! என்ற 
இவ்வாறான குழப்பங்கள் தோன்றினால் உங்கள் வைத்தியரிடம் கலந்தாலோசித்து முடிவை எடுங்கள்.

Dr. Halith

No comments:

Post a Comment