யானை தாக்கி மீனவர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 3, 2018

யானை தாக்கி மீனவர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஆயித்தியமலை, நெல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான மாமாங்கம் சன்முகராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நெல்லூர் பகுதியில் வேளாண்மையை துவம்சம் செய்த யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வெளியேற்ற முற்பட்ட போது, யானைக் கூட்டத்திலிருந்த ஒரு யானை கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது மீன்பிடி தொழிலுக்குச் சென்று வீடு திருப்பிய, சன்முகராசாவை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின்உடல் பிரேத பரிசோதனைக்காக கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்தச் சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment