பிறை தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நாளை பாலமுனை அல்கைரியாவில் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

பிறை தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நாளை பாலமுனை அல்கைரியாவில்

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்துள்ள பிறை தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை (05) காலை 9.00 மணியளவில் பாலமுனை ஜம்இய்யத்துஸ் ஸஹ்வா அல்கைரிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் சிறப்பு சொற்பொழிவாளராக அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஏ. முபாறக் (மதனி) கலந்து கொள்ளவுள்ளார்.

அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக எமது இலங்கைத் திருநாட்டில் ஷவ்வால் மாதத்திற்கான பிறையைப் பார்ப்பதில் குழப்பகரமான நிலை ஏற்பட்டு வருவதையும், அதனால் நோன்புப் பெருநாளை பல நாட்களில் கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதையும் நாம் யாவரும் நன்கு அறிவோம்.

எதிர்வரும் காலங்களில் தேசிய ரீதியில் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் பெருநாட்களைக் கொண்டாட வழிசெய்யும் விதத்தில் பிறை தொடர்பான விழிப்புணர்வு மாநாடொன்றை அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள மாவட்ட ஜம்இய்யா கிளைகளின் தலைவர்களும், செயலாளர்களும், பொருளாளர்களும் மற்றும் மாவட்ட ஜம்இய்யா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர்கனி (ஹாமி) தெரிவித்தார்.

ஜஃபர் ஏ. கரீம்

No comments:

Post a Comment