காத்தான்குடி மாணவன் கே.எச்.எம்.அன்பஸ் சிங்கப்பூரில் வெண்கலப் பதக்கத்தினை தனதாக்கி கொண்டு சாதனை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 5, 2018

காத்தான்குடி மாணவன் கே.எச்.எம்.அன்பஸ் சிங்கப்பூரில் வெண்கலப் பதக்கத்தினை தனதாக்கி கொண்டு சாதனை

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல கணித வினாடி வினாப் போட்டியில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் 08ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன கே.எச்.எம்.அன்பஸ் மூன்றாமிடத்துக்கு தெரிவாகி வெண்கலப் பதக்கத்தினை தனதாக்கி கொண்டு சாதனை படைத்துள்ளதாக வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.எல்.எம்.லாபீர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் பதினைந்து நாடுகளில் இருந்து முப்பத்திரெண்டு மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு உட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் செல்வன் கே.எச்.எம்.அன்பஸ் சர்வதேச ரீதியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற குறித்த போட்டியில் கலந்துகொள்ள எமது நாட்டிலுள்ள மாணவர்கள் சென்றிருந்தனர் அந்த வகையில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் செல்வன் கே.எச்.எம்.அன்பஸ் சர்வேதேச ரீதியிலும் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

சாதனை படைத்து நாட்டுக்கும், பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ள மாணவனுக்கு தன்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு குறித்த மாணவன் தன்னுடைய திறமையினை வெளிக்காட்ட உதவிய ஆசிரியர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.எம்.லாபீர் மேலும் தெரிவித்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment