ஊடகத்துறையில் கடந்த ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை சங்கமும் இணைந்து விருதுகள் வழங்கியுள்ளன.
இதில் கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பெரும்பாலும் தேசிய ஊடகங்களில் பணிபுரிந்தோராகும். ஆனால் யதார்த்ததில் ஊடகங்களில் சம்பளத்துக்கு என பணிபுரியாமல் தண்ணார்வ ஊடகவியலாளர்கள் பலர் உள்ளனர்.
சிறு பத்திரிகைகளை சுயமாக வெளியிடுதல், இணையத்தளங்களை நடாத்துதல் அவற்றில் சுதந்திரமாகவும் காத்திரமாகவும் பணம் பற்றிய கவலையின்றி ஊடக பணியாற்றும் பலர் இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் எவரும் இந்த பத்திரிகை சங்கங்களினால் கண்டு கொள்ளாமல் விடப்படுவது ஏன்? இவ்வாறு செய்வது திறமையான, சுதந்திட ஊடகவியலாளர்களுக்கு செய்யும் அநியாயமாகும்.
மேற்படி விருதுகளுக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது என சொல்வதை விட ஊடகங்களில் சம்பளத்துக்கு பணிபுரியும் சிறந்த ஊடகவியலாளர் விருது என சொல்வது பொருத்தம் என உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
முபாறக் அப்துல் மஜீத்
No comments:
Post a Comment