தமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளியிடுகின்றார் மீள்பார்வை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக கடமையாற்றி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் தகவல் அலுவராக பணியாற்றும் அனஸ் அப்பாஸ்.
இந்நூல் வெளியீடு ஆகஸ்ட் 7 ஆம் திகதி (நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 7 மணிவரை, கொழும்பு – 10, D.R விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.
நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இச்சிறப்பு நூல் வெளியீட்டு விழா நிகழ்வில், கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் கௌரவ துன்கா ஒஸ்ஷுஹதார், தேசிய ஊடக மத்திய நிலையத் தலைவரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தேர்தல்கள் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.எம். முஹம்மத், பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.எஸ்.எம். முஹம்மத் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூல் அறிமுக உரையை சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல கவிஞருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் மேற்கொள்வார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் விஷேட உரை நிகழ்த்துவார்.
சாதனையாளர்கள் 29 பேருக்குமான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இதில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
அரிய சாதனையை முடித்து, அடுத்த சாதனைக்காய் அமைதியாய் பயணிக்கும் நான் கண்ட பொக்கிஷங்கள் பற்றிய மடலாய், நூல் ஆசிரியர் இந்நூலை எழுதியிருக்கிறார்.
நூல் ஆசிரியர் அனஸ் அப்பாஸ் தேடிப் பிடித்து எழுதிய இலைமறை காய் சாதனையாளர்களை "மீள் பார்வை" பத்திரிகையின் மூலம் அறிமுகம் செய்து வந்ததுடன், அவ்வாறு அறிமுகம் செய்த பலரையும் நூல் ஆசிரியர் ஒன்று சேர்த்து வரலாற்று ஆவனமாகப் பதித்து, புத்தக வடிவமாக இந்நூலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment