ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் காலவரையறையின்றி மூடல் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் காலவரையறையின்றி மூடல்

நிலவும் வரட்சியுடனான வானிலையால் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகளை பிற்போடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்தார்.

நிலவும் வரட்சியினால் பல்கலைக்கழக விடுதிகளுக்கு நீர் விநியோகிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அம்மை நோய் பரவுவதால் கடந்த 8 ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டன.

பரீட்சைகளுக்காக செப்டம்பர் 3 ஆம் திகதி பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், காலவரையறையின்றி மூடுவதற்கு இன்று மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment