அச்சுவேலியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

அச்சுவேலியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று (31) விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment