பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, August 3, 2018

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

சட்டத்துக்கு மாறான முறையில் சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு வந்தது. 

தனிப்பட்ட விஜயமாக ஜப்பானுக்கு செல்ல வேண்டி உள்ளதால் அனுமதி வழங்குமாறு ரோஹித அபேகுணவர்தனவின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். 

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதி வரை அவருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டதுடன், நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment