வாத்துவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
நேற்று (04) இரவு குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் நால்வருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி 36, 20 வயதுடைய கெஸ்பேவ மற்றும் திவுலபிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தற்போது பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று (05) இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment