மேன்முறையீட்டிற்கான அனுமதி கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளது.
அதன்படி அவரது கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பாக இன்று (31) தீர்மானிக்கப்படவுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஞானசார தேரர், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சீருநீரக பாதிப்புக் காரணமாக கடந்த சில நாட்களாக அவருக்கு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு அவருக்கான சிகிச்சை நிறைவடைந்துள்ளதை அடுத்தே, நேற்று (30) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட ஞானசாரத் தேரர், நாட்டுக்காக தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செய்றபடுவதாகவும், அனைவருக்காகவும் தாம் கதைத்துள்ளதாகவும் கூறினார்.
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய சந்தர்ப்பத்தில், ஞானசார தேரர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment