இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

உலக புகழ்பெற்ற சமூக வலையத்தளமான பேஸ்புக் நேற்று (03) இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டதாக தெரிய வருகிறது. 

இதனால் உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளர்களால் பல நிமிடங்கள் பேஸ்புக்கிற்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. எனினும் சில நிமிடங்களின் பின்னர் இந்த நிலைமையை சீர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொண்டதாக பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவனம் செயலிழந்தமை தொடர்பான முறைப்பாடு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலேயே பதிவாகியாகியுள்ளது. இலங்கையும் இந்த நிலைமைக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment