நாட்டில் பொருளாதார நிலைமை சீரழிந்து வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முற்படுகின்றமையை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித்.பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தமது கடன்களை மக்களிடமிருந்து அறவிடுகின்ற வரி பணத்தின் ஊடாக செலுத்த முற்படுகின்ற நிலையில் இத்தகைய செயற்பாடு ஏற்புடையது அல்லவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதனால் மக்களே அதிகளவு பாதிக்கப்படுவார்களெனவும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பள உயர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனுடன் தொடர்பான முன்னரான செய்திகளுக்கு
https://www.newsview.lk/2018/08/blog-post_99.html
https://www.newsview.lk/2018/08/blog-post_95.html
https://www.newsview.lk/2018/08/215.html
No comments:
Post a Comment