தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை - பென்சிலையோ, நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தலாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை - பென்சிலையோ, நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தலாம்

நாளை (05) ஞாயிற்றுக்கிழமை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மூவாயிரத்து 50 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 326 பேர் தோற்றுகின்றார்கள். நாடெங்கிலும் 497 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலாவது வினாத்தாளுக்கு 45 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளுக்கான பரீட்சை 9.30 ற்கு ஆரம்பமாகும். இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை முற்பகல் 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

ஓவ்வொரு பரீட்சார்த்தியும் வினாத்தாளின் இடதுபக்க மேல் மூலையில் தமது பரீட்சை சுட்டெண்ணை தெளிவாக எழுத வேண்டும். பென்சிலையோ, நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும். 

விடையளிக்கையில் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என ஆணையாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பெற்றோர் நேர காலத்துடன் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பது அவசியமாகும். இடைவேளையின் போது பெற்றோர் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

பிள்ளைகளுக்கு இலேசாக செமிக்கக்கூடிய உணவையும், தண்ணீர் போத்தலையும் வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment