அமைச்சர் துமிந்த மட்டக்களப்பு விஜயம் : பிரதியமைச்சர் மௌலானாவுடன் நிகழ்வுகளில் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

அமைச்சர் துமிந்த மட்டக்களப்பு விஜயம் : பிரதியமைச்சர் மௌலானாவுடன் நிகழ்வுகளில் பங்கேற்பு

நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ, அனர்த்த நிவாரண அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று (04) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிரான் பொண்டுகள்சேனை, வாகனேரி, செங்கலடி, உன்னிச்சை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பொங்கல் அறுவடை விழாக்கள், விவசாயிகள் சந்திப்புக்கள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் சந்திப்புக்கள் எனப்பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கலந்து சிறப்பித்ததுடன், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இதன் போது மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் தனது பிரதேசத்திற்கு வருகை தந்த நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சரிடம் மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குறிப்பாக ஏறாவூர்ப்பற்றிலுள்ள விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு பிரதியமைச்சர் கொண்டு சென்றதுடன், குறித்த விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

மேற்படி குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் உடன் கவனஞ்செலுத்தி தீர்வுகளை வழங்குவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மற்றும் விபரத்திரட்டல்களை மேற்கொள்ளுமாறு உடனடியாக அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
இதன் போது விவசாயிகள் சார்பில் கருத்து வெளியிடுகையில், தங்களின் நலன்கருதி மாவட்டத்தில் மிகவும் கரிசனையுடன் செயற்படும் ஒருவராக பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா விளங்குவதாகவும், ஏதும் பிரச்சனைகள் தொடர்பில் எந்த வேளை அழைப்பை ஏற்படுத்தினாலும், அதற்கு பதிலளித்து தீர்விற்கு வழியமைக்கும் ஒருவராக என்றும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், கடந்த காலங்களில் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகளில் தீவிர கவனஞ்செலுத்தியதுடன் குறிப்பாக முகத்துவாரம் மூடப்பட்டுக்கிடந்தமை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கிய நேரத்தில் நேரடியாக களத்திற்குச் சென்று முகத்துவாரத்தை வெட்டித்திறந்து கொடுத்தது முதல் விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் நீர்ப்பாசன ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க முன் நின்றமை மறக்க முடியாத சேவைகள் என்றும், இதற்காக பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அங்கிருந்த விவசாயிகள் நேரடியாகக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் முஹம்மது அஸ்மி

No comments:

Post a Comment