பிரபாகரனுக்கு தேவையானதை நடைமுறைப்படுத்த இடமளியோம் என்கிறார் மேர்வின் - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

பிரபாகரனுக்கு தேவையானதை நடைமுறைப்படுத்த இடமளியோம் என்கிறார் மேர்வின்

சிங்களவர்களை எதிர்த்தால் சிறுபான்மை இன மக்கள் நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கப்படுவார்கள் என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தேவையானதை இலங்கையில் நடைமுறைப்படுத்த இடமளிக்கப் போவது இல்லை என்றும் கூறினார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை - 31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரபாகரன் நினைத்தவற்றை இலங்கையில் செயற்படுத்த ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. வடக்கு முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே தடுமாறுகின்றனர்.

நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. தமிழர்களுக்கு எம்முடன் இணைந்து செயற்பட முடியும். இலங்கை ஒரு சிங்கள மொழியை பேசக்கூடிய ஒரு பௌத்த நாடாகும். அது போன்ற நாட்டில் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லவே எதிர்பார்கின்றோம்.

சிறுபான்மை இன மக்கள் சிங்களவர்களை எதிர்த்தால் அவர்கள் அடியோடு ஒழிக்கப்படுவார்கள். சிறுபான்மை இனத்தவர்களுக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. எனவே வடக்கு முதல்வருக்கு எம்மை நோக்கி விரல் நீட்டி கருத்துக்களை தெரிவிக்க முடியாது.

செல்வநாயகத்திற்கும், பொன்னம்பலம் போன்றோருக்கு செய்ய முடியாதவற்றை சுமந்திரன் போன்றோருக்கு செய்து முடிக்க முடியாது. ஆகவே நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட நான் தயார்.

அப்படி தெரிவானால் வடக்கு மற்றும் கிழக்குக்கு சென்று எம்முடன் கைகோர்குமாறு கோருவேன். ஆனால் அவர்களிடம் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டாம் என கூறுவேன்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment