கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவரும் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி. எம். எச். ரிஸ்பின் அவர்களின் தலைமையில் அமைப்பின் செயலாளர் எஸ்.எல். இப்ராஹிம் மற்றும் நிருவாக செயற்குழுவின் உறுப்பினர்கள் பலரும் இன்று (05) பாராளுமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சரின் காத்தான்குடி நகர காரியாலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் இஸ்லாமாபாத் நகரம் சுனாமியின் பின்னர் எவ்விதமான அபிவிருத்திகள் இன்றி அரசியல் தலைமைகளால் புறந்தள்ளப்பட்டு கவனிப்பாரின்றி அனாதையான நிலையில் உள்ள நகரம் தற்போதைய நிலையில் அங்கு கௌரவ அமைச்சர் அவர்களினால் அவர்களின் அமைச்சு மூலம் மேற்கொள்ள வேண்டிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மற்றும் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் போன்றவற்றை துரிதப் படுத்த வேண்டிய அவசியமும் அதற்கான காரணங்களையும் அமைச்சர் அவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டு அமைச்சர் அவர்களிடம் இஸ்லாமாபாத் மக்கள் சார்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவரினால் மகஜரும் கையளிக்கப் பட்டது.
மேற்படி சந்திப்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உரையாற்றும் பொழுது இஸ்லாமாபாத் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தான் உடன் கவனத்தில் கொள்வதாகவும் ஏற்கனவே இஸ்லாமாபாத் கிராமத்திற்கு தான் வருகை தந்துள்ளதாகவும் அங்குள்ள பிரச்சினைகள் தான் ஓரளவிற்கு உணர்வதாகவும் மிக விரைவில் அங்குள்ள நிலைமைகளை உடன் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் உறுதியளித்தார்.
முஹம்மது காமில்
No comments:
Post a Comment