தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் உள்ளதால் வழக்கு இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து, படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005 ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment