கண்களுக்கு தெரியாத எத்தனையோ விடயங்களின் மிக முக்கியமான ஒரு விடயம் நமது நாட்டில் இருக்கும் இலைமறை காயாக இருக்கும் சாதனையாளர்கள். சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கும் ஒரு சிலர் செய்யும் வேலைகளும் சேவைகளுமே எப்போதும் ஆவணப் படுத்தப் படுவதுண்டு.
ஆனால் சகோதரர் அனஸ் அப்பாஸ் தேடிப் பிடித்து அப்படியான சாதனையாளர்களை மீள் பார்வை பத்திரிகையின் மூலம் அறிமுகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் அறிமுகம் செய்த பலரையும் ஒன்று சேர்த்து வரலாற்று ஆவனமாக எதிர்வரும் 07/08/2018 அன்று கொழும்பு -10 தபால் தலைமயக கேட்போர் கூடத்தில் மாலை 05.00 மணிக்கு புத்தகமாக வெளியிட இருக்க்கின்றார். இவ்வாறான முயற்சிகள் கட்டாயம் நாம் வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த நிகழ்வில் சுயமாக முன்னேரிய பல முக்கிய பிரமுகர்கள், பிரபல ஊடகவியலாளர்கள் இன்னும் பல முக்கிய நபர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இதற்கான உத்தியோகபூர்வ உடக அனுசரணை கொபிடல் f.m வழங்க இருக்கிறது. மிக முக்கியமான ஒரு புத்தக வெளியீடாக இது அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று பதிவுகா அமையும் எனதி எதிர்பாக்கப் படுகிறது.
சிமாரா அலி
No comments:
Post a Comment