இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு கெக்டர்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.
இதற்கான ஆலோசனைகள் அமைச்சரினால் நேற்று மாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உர நிவாரணத்திற்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இந்த பணம் வழங்கப்படவுள்ளது.
அப்புத்தளை, கஹத்தேவல இந்த நாட்டின் முதலாவது விவசாய மாதிரி கிராமமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தின் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைளில் ஒன்று விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்றது.
இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை விவசாயிகள் மத்தியில் விரிவு படுத்துவது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. சுமார் 5000 விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு இயற்கை உரத்தை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் இந்த வருடத்தில் விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குவதற்காக 33,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
No comments:
Post a Comment