வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு - அமைச்சர் கபீர் ஹாஷீம், ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு - அமைச்சர் கபீர் ஹாஷீம், ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் போன்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (21) செவ்வாய்க்கிழமை மாலை நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்றது. 

இதன்போது நாட்டில் அமைக்கப்பட்டு வருகின்ற நெடுஞ்சாலைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. 
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் இவ்விசேட கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதன்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சகல வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 
இதன்போது இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய, இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டத்துக்குள் ஹபரன தொடக்கம் நாவலடி வரையிலான வீதி உள்வாங்கப்பட்டு நான்கு வழிப்பாதையாக அது அபிவிருத்தி செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

அதற்கான சகல மதிப்பீடுகளையும் செய்து வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

No comments:

Post a Comment