இருளடைந்து காணப்படும் தனது வட்டாரத்தை ஒளியூட்டும் பணியில் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

இருளடைந்து காணப்படும் தனது வட்டாரத்தை ஒளியூட்டும் பணியில் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.இப்ராஹீம் (அஸ்மி) செம்மண்ணோடை - மாவடிச்சேனை வட்டாரத்தில் இருளடைந்து காணப்படும் பிரதேசங்களில் மின்குமிழ்களைப் பொருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரதேச மக்களின் நன்மைகருதி முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணியில் முன்னுரிமை அடிப்படையில் இருளடைந்த இடங்களை இனங்கண்டு அவற்றுக்கு மின்குமிழ் பொருத்தப்பட்டன.

அத்துடன், அடுத்தடுத்த கட்டங்களில் தனது வட்டாரத்தில் சகல பிரதேசங்களிலும் மின்குமிழ்களைப் பொருத்தி பூரணமாக தனது வட்டாரத்தை ஒளியூட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்,

இத்திட்டத்தினூடாக பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைவதுடன், இருள் சூழ்ந்து காணப்படுவதானால் ஏற்படும் அசெளகரியங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பு பெறவும் எமது பிரதேசத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் பாவனையைத் தடுக்கவும் வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஸ்கர் அலி

No comments:

Post a Comment