தற்காலிக புதிய நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (03) கூடப்படவுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இந்த கூட்டம் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது தற்காலிக நிர்வாக குழுவொன்றை நியமித்து கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று இடம்பெறவுள்ள விசேட மத்திய குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அகில இலங்கை செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு என்பனவும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment