நோட்டன் பிரீஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிக்தேன - நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் லோனக் கல்குவாரி பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்த விழுந்ததில் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் தொடர்ந்து பெய்த கடும் மலையின் காரணமாக இன்று (03) அதிகாலை 2 மணி அளவில் இந்த பாரிய கல் சரிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் கினிகத்தேன - நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கினிகத்தேனையில் இருந்து நோட்டன் பிரீஜ் பகுதிக்கு செல்லும் வாகன சாரதிகள் லக்ஷபான கலுகொல்ல வழியாக நோட்டன் பிரீஜ் வழியாக மாற்று வீதியினை பயன் படுத்துமாறு நோட்டன் பிரீஜ் பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கோரியுள்ளனர்.
இதேவேளை மலையகத்தில் தொடர்ந்து பெய்யும் மலையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
கினிகத்தேன நோட்டன் பிரீஜ் வீதியில் சரிந்து விழுந்துள்ள பாரிய கற்பறைகளை அகற்றுவற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியோடு சரிந்து விழுந்த கற்பாறைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நோட்டன் பிரீஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எனவே பொலிஸாரின் மறு அறித்தல் வரைக்கும் கினிகத்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாமெனவும் பொலிஸார் கோரியுள்ளனர்.
சதீஸ்குமார்
No comments:
Post a Comment