தூத்துக்குடியில் படுகெலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் நிறைவில், இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம், தமிழ் நாட்டு அரசிற்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment