மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கோல்டன் பீகொக் (Golden Peacock) பதக்கம் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இல. 24 லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு - 05 இல் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் வைத்து அவரின் மனைவி சுமித்ரா பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் கடந்த 02ம் திகதி அவருடைய இறுதிக்கிரியையின் போது காணாமல் போயிருந்தது.
அதன்பின்னர் கடந்த 05ம் திகதி கொள்ளுப்பிட்டி - கடுவலை மார்க்கத்திலான 177ம் இலக்க தனியார் பஸ் ஒன்றில் இருந்து இந்தப் பதக்கம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment