தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது றத்மலானை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த லமாஹேவாகே நிகால் திசாநாயக்க எனும் பெபா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடம் 02 கிராமும் 660 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment