வடக்கு,கிழக்கு மாகாணங்களில் படையினரின் பாவனையிலுள்ள காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை - பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் படையினரின் பாவனையிலுள்ள காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை - பிரதமர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரின் பாவனையிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

நேற்று பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் காணியை ஒன்பது வருடங்களாக இராணுவத்தின் 64 ஆவது பிரிவின் தலைமையகம் பயன்படுத்திவருகின்றது. இதனால் முத்தையன்கட்டுக்குரிய நீர்ப்பாசன பொறியியலாளர் திணைக்களத்தை அவ்விடத்தில் அமைக்கமுடியாதுள்ளது. 

அலுவலகம் அமைக்கப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளநிலையிலும் காரியாலயத்தை அமைக்க காணி வழங்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா சுட்டிக்காட்டினார்

இதற்கு பதிலளித்த பிரதமர் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 64ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள காணி, இராணுவத்தினரால் துப்பரவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கேந்திர முக்கிய பகுதியாக விளங்குவதால் அந்தப் பகுதியை தற்போது மீள கைவிட முடியாது என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

படைப்பிரிவின் தலைமையகம் அமைப்பதற்கு முன்னர் அவ்விடத்தில் நீர்பாசன காரியாலயமொன்று இருந்திருந்தாலும், அது திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அரச காணியாகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மாற்றுக்காணியொன்றில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தை அமைப்பது குறித்து பரீசிலிப்பதே சிறப்பு. அதற்கான நிதி ஒதுக்கப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் பாவனைக்குட்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பதற்கு ஏற்ற வகையிலான பாதுகாப்பு படையினருக்கு தேவையற்றதென கருதப்படும் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு சென்றிருந்தபோது இது பற்றி படையினரிடம் பேசினேன். கொழும்பு வந்த பிறகு இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடினேன். ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன். விரைவில் முல்லைத்தீவுக்கு வருவதற்கும் எதிர்பார்பார்த்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment