துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், சங்கரில்லா ஹோட்டலுக்கு அரச காணிகள் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டன.
ஆனால் அதுகுறித்த விடயங்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை எம்முடன் பேசவுமில்லை. இந்த நிலையில் சிங்கப்பூர் ஒப்பந்தம் பற்றி எம்முடன் கேள்வி கேட்பது வேடிக்கையான விடயம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் சிங்கப்பூருடனான ஒப்பந்தம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிபட்டார்.
பொறியியல் நிறுவனத்தினருடன் நாம் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேசினோம். இந்தப் பொறிமுறை தொடர்பில் உடன்பாடு காணப்பட்டது. சிங்கப்பூர் துறைசார் நிபுணர்களை சிங்கப்பூர் இங்கு அனுப்பவோ எமது துறைசார் நிபுணர்களை அங்கு அனுப்பவோ எந்தத் திட்டமும் கிடையாது. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சீனாவில் இருந்து தொழிலாளர்கள், பொறியியலாளர்கள் இங்குவந்து பணிபுரிந்தார்கள்.
வீதி அமைப்பதற்கு பங்களாதேஷிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனால் நாம் மகாவலித் திட்டம் சுதந்திர வர்த்தக வலயம் என்பனவற்றை உருவாக்க வெளிநாட்டுத் தொழிலாளர்களை கொண்டுவரவில்லை.
இதன் போது குறக்கிட்டதிரு பந்துல குணவர்தன இடையீட்டு கேள்வியொன்றை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் எம்முடன் அறிவித்துவிட்டா துறைமுக நகரம் அமைக்க காணி வழங்கினீர்கள்? விபத்மகவில் உங்கள் திட்டங்கள் முன்வைக்கப்பட்டனவே. இதை பேசினால் கோதாபய உங்களுக்கு அமைச்சு பதவி வழங்க மாட்டார்.
உள்நாட்டு வங்கிகள் குறித்து நம்பிக்கை இல்லாததால் தான் டுபாய், மொனாக்கோ, சீசல்ஸ் வங்கிகளில் பணத்தை வைப்பு செய்தீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

No comments:
Post a Comment